26 ஜூலை, 2017

கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் காப்பு கட்டு !!!

கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் காப்பு கட்டு !!! 

25 ஜூலை 2017.







     இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை கானாட்டாங்குடி ஒத்தப் பனை பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 18 ல் தீமிதி திருவிழா நடை பெறுவது வழக்கம் .அதனை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. 
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஆடி 18 அன்று நடைபெறும்.


கானாட்டாங்குடி காப்புக்கட்டு எப்படி இருக்கும் !

   கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் காப்புக்கட்டு நடப்பதற்கு முன்பாக கானாட்டங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை சாலையில் இருபுறமும் உள்ள முள் செடிகள் (வேலிக்கருவை) வெட்டப்பட்டு சாலை சீரமைக்கபடும்.
  காப்புகட்டுவதற்காக வைக்கோல் பிரி செய்து அதில் வேப்பிலை, மாவிலை சொருகி ஒரு நீண்ட மாலை போல தோரணம் தயார்செய்து இருக்கும்.  இந்த தோரணத்தை கோவில் முன்பும் ஊர் எல்லையில் இருபுறமும்  சாலையின் குறுக்கே கட்டப்படும்.
                 
                 நேத்திக்கடன் செலுத்துபவர்கள், காவடி, கரகம் மற்றும் பால் குடம் எடுப்பவர்கள் சிறப்பு உடையனிந்து     கோவில் பூசாரியால் அர்ச்சிக்கப்பட்ட மஞ்சளை நூலில் கட்டி, தங்கள் வலது கை மணிக்கட்டில் கட்டிகொள்வார்கள்.
அன்று முதல்  தீ மிதி நாள் வரை விரதம் இருந்து தங்களின் நேத்திக்கடனை செலுத்துவார்கள்.




கோயில் விசேஷங்களில் காப்பு கட்டுதல் அப்படினா என்ன ?


ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் 
என்று வேண்டிக்கொன்று செய்வதற்கு காப்பு கட்டுதல் என்று பெயர்.

நாம் செய்வது ஒருநாள் பூஜையாகவும் இருக்கலாம் அல்லது பத்து நாள் பூஜையாகவும் இருக்கலாம். இந்த மாதரி செய்யகூடிய காரியங்களில் காப்புகட்டுதல் செய்துகொண்டால் ஊர் எல்லை தாண்டி போககூடது, விரதம் இருக்கணும் இது மாதரி இருந்துகொண்டால் அந்த காப்பு நம்மை காப்பாற்றும் .  



#கானாட்டாங்குடி
#kanattangudi

VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...