17 டிசம்பர், 2015

அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில்

திருமாலுக்கு வெற்றி கிடைக்க வழி செய்த தலம்தான் திருவெற்றியூர்.




மூலவர்: – பாகம்பிரியாள்
தீர்த்தம்: – வாசுகி தீர்த்தம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – திருவெற்றியூர்
மாவட்டம்: – ராமநாதபுரம்
மாநிலம்: – தமிழ்நாடு
திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
                                            மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

வழிபட்டோர்         : மகாவிஷ்ணு, வாசுகி.  

தலப் பாடல்கள்     : சம்பந்தர் - மனவஞ்சர் மற்றோட (2-39-6) 
                          அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 
                          சுந்தரர் -  மூல னூர்முத லாயமுக் (7-12-3). 


தலவரலாறு -1

ஒருங்கிணைந்த சேர, சோழ, பாண்டிய நாட்டை மாவலிச் சக்கரவர்த்தி ஆண்டு வந்தான்.அவனுக்கு, மக்களிடத்தில் அமோக செல்வாக்குப் பெருகியது. இதனால் மன்னனின் மனதில் ஆணவம் தலைதூக்கத் தொடங்கியது. இறைவனையும் தேவர்களையும் மதிக்காமல் வாழத் தொடங்கினான்.  கலகம் செய்வதில் வல்லவரான நாரதர், இவனைப் பற்றி சிவபெருமானிடம் சொன்னார். ஆனால்,சிவபெருமானோ, ‘‘என்னுடைய சன்னதியில் தூண்டா மணி விளக்கு அணைய இருந்தது.முற்பிறவியில் எலியாக இருந்த இந்த மன்னன் திரியைத் தூண்டிவிட்டு ஒளி பரவச் செய்தான்.எனவே, மறுபிறவியில் நீ, 56 தேசங்களையும் ஆட்சி செய்யக் கடவாய் என நான் வரம் கொடுத்தேன்.என் வரத்தின்படி அவன் மாவலிச் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். அவனை நான் அழிப்பது தர்மம் அல்ல’’ என்று கூறினார்.  இதைக் கேட்ட நாரதர், உடனே திருமாலைத் தேடிச் சென்று அந்த மன்னனைப் பற்றிக் கூறினார்.ஆவன செய்வதாக திருமால் கூறியதுடன், ஓர் ஏழைக் குள்ள அந்தணனாக உருவெடுத்து, மன்னனைத் தேடிச் சென்றார். தான் யாகம் செய்யப்போவதாகவும், அதற்காக மூன்றடி இடம் வேண்டும் என்று கேட்க, மன்னனும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பூலோகத்தைக் காண்பித்து, எடுத்துக் கொள்ளும்படி கூறினான்.

உடனே விஸ்வரூபம் எடுத்த திருமால், தன் நீண்ட கால்களால் இப்பூவுலகை முதல் அடியாகவும்,ஆகாயத்தை இரண்டாவது அடியாகவும் அளந்தார். மூன்றாவது அடிக்கு மன்னன் தன் தலையைக் காட்ட, திருமால் அவன் தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்த, பாரம் தாங்காத மன்னன் அதலபாதாளத்தில் அமிழ்ந்தான். தர்மத்தின் காவலனாய்த் திகழ்ந்த மாவலி மன்னனின் மறைவைக் கண்டு மனம் கலங்கினாள் தர்ம தேவதை. உடனே, திருமாலின் காலைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவள் விட்ட கண்ணீர்த் துளிகள் திருமாலின் பாதமெங்கும் தெரித்தன. அந்தக் கண்ணீர்த் துளிகள் தெரித்த இடமெங்கும் திருமாலின் காலில் புற்று வளரத் தொடங்கியது. மனம் பதைத்த திருமால், மதுரை மீனாட்சியை வழிபட்டு, தன் கால் புற்று நீங்க வழி கேட்டார். மீனாட்சி காட்டிய வழிப்படி ஜெயபுரம் வந்த திருமால்,அங்கிருந்த வாசுகி தீர்த்தத்தில் நீராடினார். பிறகு, அங்கிருந்த வில்வ மரத்தின் அடியில் இருந்த கல் ஒன்றை லிங்கமாகப் பாவித்து, கட்டிப்பிடித்து சிவ பூஜை செய்தார். அவரது பூஜைக்கு மனமிரங்கிய சிவபெருமான், சக்தியுடன் அர்த்தநாரீஸ்வரராய் திருமாலுக்குக் காட்சி தர, அவர் காலில் இருந்த புற்றும் நீங்கியதுஒரு காலத்தில் ஜெயபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது திருவெற்றியூர் என அழைக்கப்படுகிறது.



தல வரலாறு – 2

இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான்.
நாரதரும் சிவபெருமானும்இதனை அறிந்த நாரதர் நேராகக் கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான்,”முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான்.இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார்நாரதரும், திருமாலும்இதையடுத்து நாரதர் திருமாலிடம் தனது கோரிக்கையை கொண்டு சென்றார். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மாவலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் நான் யாகம் நடத்த 3 அடி இடம் வேண்டும் என்றார்தன் கொடைப் பெருமையால் முகமும், அகமும் மலர மூவடி தந்தேன் என்றான் மன்னன்.ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விசுவரூபம் எடுத்த திருமால் தன் நீண்ட கால்களால் உலகை இரண்டடியால் அளந்தார்3ம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான்.தலையில் 3ம் அடியை அளந்தார். மகாபலி பிறவிப்பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான்.

தர்மதேவதை:

இதனை அறிந்த தர்மதேவதை மகனை இழந்த துன்பம் ஏற்பட்டது போல் துடித்தாள்.சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் 3ம் அடி அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் திருமால் முறையிட்டார்.

சாபவிமோசனம்:

இதுகேட்ட சிவபெருமான் திருமாலிடம்,”18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி,திருவாடானை என்னும் திருத்தலத்திலுள்ள ஆதிரெத்தினேசுவரரை தரிசிக்க வேண்டும்என்றார்.
இரவில் துயில்கொள்ளும்போது சிவபெருமான் கனவில் தோன்றி, “இந்த இடத்திற்கு தெற்கில் திருவெற்றியூர் என்னும் தலம் உள்ளது. அங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி லிங்கத்தை தழுவி வழிபட்டால் உன் புற்று நீங்கும்,” என்று கூறி மறைந்தார். கங்கா தேவியை அழைத்து,”தர்ம தேவதை திருமாலுக்கு புற்று நோய் வருமாறு செய்து வேதனைபடுத்துகிறாள். தர்ம தேவதையின் கோபத்தை அடக்க நீதான் தகுதியானவள். திருமாலிற்கு நீதான் உதவி செய்ய வேண்டும்,” என்றார். திருவெற்றியூர் வந்த திருமால் சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது.அன்றுமுதல் சிவபெருமானுக்கு பழம்புற்றுநாதர் என்றும் உடன் உள்ள பார்வதிக்குபாகம்பிரியாள் என்றும் பெயர் வழங்கலாயிற்று.

கோவில் அமைப்பு 

இறைவனின் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் உள்ளன.  இங்கு இறைவனையும் இறைவியையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதற்காக எப்போதும் இரட்டை அர்ச்சனையே நடைபெறுகிறது. முதலில் சிவபெருமானுக்கும், பிறகு அம்மனுக்கும் அர்ச்சனை செய்கின்றனர். அம்மனுக்கோ, சுவாமிக்கோ இங்கு தனியாக அர்ச்சனை செய்வது கிடையாதுஅம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள வில்வ மரத்தடியில்தான் திருமாலுக்கு சிவனும் சக்தியும் காட்சி தந்து புற்றை நீக்கியதாக ஐதிகம். இந்த மரத்தடியில் வில்வ மர விநாயகரும், நாகரும் காட்சி தருகின்றனர். இவர்களை, உப்பும் முட்டையும் சமர்ப்பித்து வணங்கினால் வணிகம் தழைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்திற்கு, முன் தினம் இரவு வந்து தங்கி, விடியற்காலையில் வாசுகி தீர்த்தத்தில் நீராடி,இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், தீராத வியாதிகளும் அகன்று விடும் என்பர்.



அகத்திய விநாயகர்
பொதிகைக்குச் சென்ற அகத்தியர், இங்குள்ள விநாயகரை வழிபட்டார். அவரை, “அகத்திய விநாயகர் என்கிறார்கள். பிரகாரத்திலுள்ள உள்ள வில்வ மரத்தடியில் புற்றடி விநாயகர்இருக்கிறார். திருமணதோடம் உள்ளவர்கள் இவருக்கு பால்முழுக்கட்டு செய்தும், அருகிலுள்ள நாகருக்கு மாங்கல்யம் அணிவித்தும் வணங்குகின்றனர்

அமுக்கிப் போட்டா சரியாப் போகும்

தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இவளை மருத்துவச்சி அம்மன் என்றும் அழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி துவங்கும் முன், விதை நெல்லை அம்பாள் சன்னதியில் வைத்து பூசித்துச் செல்கின்றனர். முதலில் அறுவடை செய்யும் நெல்லையும் இவளுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பகுதியில் யாரேனும் நச்சுப்பூச்சிகளால் கடிபட்டால், அவர்களை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களை கோயில் எதிரேயுள்ள வாசுகி தீர்த்தத்தில் மூழ்கச்செய்து, மண்டபத்தில் படுக்க வைத்து,அம்பிகைக்கு முழுக்காட்டு செய்த தீர்த்த பிரசாதம் தருகின்றனர். தற்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தீர்த்தக்குளத்தில் அமுக்கி குளிக்க வைப்பதால், “அமுக்கிப்போட்டா சரியாப்போகும் என்று சொல்லும் வழக்கம் உள்ளது.

ஐந்து இருடிகளுடன் தெட்சிணாமூர்த்தி:

சனகாதி முனிவர்கள் நால்வருடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு அகத்தியர், கவுதமர்,காஷ்யபர், ஆங்கீரசர், பரத்வாசர் என ஐந்து இருடிகளுடன் காட்சி தருகிறார். இவர் இடது கையில் மலர் வைத்திருப்பதும், பின்புறம் கல்லால மரம் இல்லாததும் சிறப்பு. குரு பெயர்ச்சிக்குப் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இவரை வழிபட்டு வரலாம். பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் தங்கி வழிபடுதல் என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடித் திரும்புகின்றனர். பக்தைகள் தங்குவதற்காக கோயில் சார்பில் மண்டபமும் உள்ளது.

  
கால் புற்றால் அவதியா?
காலில் புற்று உண்டாகி அவதிப்படுபவர்கள் நிவர்த்தி பெற இங்கு வருகிறார்கள். திருமால்,மகாபலியை வதம் செய்து ஆட்கொண்ட பிறகு தர்மதேவதை இட்ட சாபத்தால் திருமாலின் காலில் புற்று வெடித்தது. இதனால் அவதிப்பட்ட பெருமாளுக்கு, இங்கு சிவன் கால் புற்று நோயை குணப்படுத்தினார். இதனால் சுவாமிக்கு பழம்புற்றை தீர்த்த பழம்புற்று நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக காலில் புற்று உள்ளவர்களுக்கு இங்கு தீர்த்தம், வேப்பிலை,விபூதி பிரசாதம் தருகின்றனர். இதைச்சாப்பிட நோய் குணமாவதாக நம்பிக்கை. புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம்.

பூச்சொரிதல் விழா:

ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு பூசை நடக்கும். ஆடி கடைசி திங்களன்று, நள்ளிரவில் அம்பிகைக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. சித்திரையில் பிரம்மோத்சவம் நடக்கிறது.
குழந்தை பாக்கியம் வேண்டிப் பெண்கள் பிரார்த்தனை செய்கின்றனர், நல்ல கணவர் அமையவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் பெண்கள் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் உரல், உலக்கை, அம்மிக்குளவியை காணிக்கையாகச் செலுத்தியும், தங்கள் உருவம் போன்று பொம்மை செய்து வைத்தும், அம்பிகைக்குத் திருமுழுக்காட்டு செய்தும் புத்தாடை சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


நம்பிக்கை 

இந்த தேவி தாயுள்ளம் கொண்டவள். இவ்வூர் மக்கள் தங்கள் சொத்துக்களை அம்பாளுக்குரியதாக கருதுகின்றனர். தாய்வழி சொத்தாக மகள்களுக்கு சொத்தை எழுதி வைக்கின்றனர்.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருக்கோயில் இது. நெல் மற்றும் தானிய வருவாய் இங்கு தான் அதிகம். காரணம், பாகம்பிரியாள். ஐம்பது மைல் சுற்றளவுக்குள் வாழ்ந்து வரும் விவசாயிகள், ‘அளக்கா பொழில்ஆக, நெல்லையும் தானியங்களையும் தாமாகவே முன்வந்து தாராளமாகக் கொண்டு வந்து கொட்டுகின்றனர் கோயில் மண்டபத்தில். நெற்பயிரையும், தானியங்களையும் பூச்சி, புழுக்களிடமிருந்து காத்து வருகிறாள் பாகம்பிரியாள்.


இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரையாவது பாம்பு தீண்டினால், அவரைத் தூக்கி வந்து,வாசுகி தீர்த்தத்தில் நீராடச் செய்து பாகம்பிரியாள் சன்னதியில் கிடத்துகின்றனர். அம்பிகையின் விபூதியையும் வேப்பிலையையும் விஷம் தீண்டப்பட்டவர் பெற்று உண்டால் குணமாகித் திரும்புவார் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை. இங்குள்ள உரலில் மாவு இடித்து மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டால் வயிற்று
வலி குணமாகும் என்கின்றனர்.

எப்படி செல்வது 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்குத் தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெற்றியூர் பாகம்பிரியாள்ஆலயம்.

திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து 'தொண்டி' செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றதும், "திருவெற்றியூர் 10 கி. மீ." என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலப்புறமாகப் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.  தொண்டியிலிருந்து 9 கி. மீ. தொலைவு.




VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...