31 மார்ச், 2018

VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ' வீடியோ எடிட்டர் .







ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெருகேற்றிய பின் வெளியிடலாம். ‘வீடியோஷோ' செயலி இதற்கு உதவுகிறது.

‘ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா!' என்பது போல் சிலர் வீடியோவின் ஒவ்வொரு நொடியையும் தானாக வடிவமைக்க நினைப்பார்கள். சாதாரண வீடியோக்களை ஸ்லோ மோஷன் வீடியோவாக இதில் சில நிமிடங்களில் எடிட் செய்துகொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் நிறைய டெம்ப்ளேட் இசை வடிவங்கள் சேர்ந்தே கிடைக்கின்றன. மொபைலில் இருக்கும் பாடல் அல்லது இசையை பயனாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்வதோடு, எடிட்டிங் செய்யும்போதே ரெக்கார்ட் செய்து ஒலியை சேர்த்துக்கொள்ளவும் முடியும். புகைப்படங்களை எடிட் செய்வதைப் போல இதில் டச்-அப் வேலைகளைச் செய்து, அதிநவீன வீடியோக்களை பயனாளர்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.



அலட்டிக்கொள்ளாமல் வீடியோவை எடிட் செய்ய விரும்புவோருக்கான அப்ளிகேஷன் இது. 
வீடியோவை ரிவர்ஸில் ஓடக்கூடியதாகவும் மாற்ற முடியும். எடிட் செய்யும்போதே அதை ப்ரிவ்யூ செய்து பார்த்துக்கொள்ளவும் முடியும்.

வீடியோ படங்களை எடிட் செய்வது, அவற்றில் பின்னணி இசை சேர்ப்பது, ஃபில்டர்களைப் பயன்படுத்துவது போன்றவ‌ற்றை இந்தச் செயலி மூலம் செய்து கொள்ளலாம். அவற்றில் பொருத்தமான ஸ்டிக்கர்களையும் சேர்த்து பின்னர் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் முலம் பகிர்ந்து கொள்ளலாம்.
குறும்படமோ, விளம்பரப் படமோ எடுத்துப்பார்க்கும் ஆசை இருந்தால் இந்தச் செயலி மூலம் முயன்று பாருங்கள்.


ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய..

ப்ளே ஸ்டோர் லிங்க் 
  

ப்ரோ வெர்சன் லிங்க் 



#கானாட்டாங்குடி
#kanattangudi




VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...