கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம். 04 ஜூன் 2015.
#கானாட்டாங்குடி
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கொட்டக்குடி ஊராட்சி கானாட்டாங்குடி கிழக்கு கடற்கரை அருகே ஒத்தப் பனை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி யாக சாலை பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் முதல் கால, 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்று கோபூஜை யுடன் காலை 11.20 மணிக்கு கிராம மக்கள் பட்டு ஏந்தி புனிதநீர் கலசத்தை எடுத்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் கோபுரத்தில்புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடந்தது. விழா வில் புதுப்பட்டினம் மற்றும் சுற்று வட்டா ரத்தை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி பக்தர்களுக்கு அன் னதானம் வழங்கப்பட்டது.
எனக்கு கிடைத்த படங்களின் தொகுப்பு கீழே !!!
#கானாட்டாங்குடி
கோவில் கும்பாபிஷேகம் காண வந்திருந்த வந்திருந்த பொதுமக்களின் ஒருபகுதி.
வர்ணக்கோலத்தில் ....!!!
வந்தவர்களை வரவேற்க வைக்கபட்டிருந்த வரவேற்பு பலகைகள் .
விழாவினை சிறப்பாக நடத்திய, நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி !!!