பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியம் இல்லை !!!
மத்திய அரசு பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
புதிய நடைமுறைகள் :
1.
பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும்.
2.
1980 பாஸ்போர்ட் வரைமுறைகளின்படி 26/01/1989 என்ற தேதியில் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்து வருகிறது.
3.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்
4.
இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15ல் இருந்து 9ஆக குறைக்கப்படுள்ளது. அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது. ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை.
5.
திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிறப்பு சான்றிதல் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செய்யலாம் .
#kanattangudi