வீடியோ கால் செய்ய கூகுளின் சூப்பர்
ஆப்ஸ் “GOOGLE DUO“
GOOGLE DUO இது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வீடியோ கால் செயலிகளைவிட இதிலுல்ல சிறப்பு
என்னவென்றால் வீடியோ அழைப்பு வரும்போது அழைப்பவரின் காட்சியைக் காண முடியும். எனவே,
அழைப்பை
ஏற்பதா வேண்டாமா என நீங்கள் தீர்மானிக்கலாம். Duo
வின்
இந்த வசதிக்கு “நாக்-நாக்’ (Knock Knock) என்று
பெயரிட்டுள்ளனர். அன்ட்ராய்ட் மற்றும்
அப்பிளின் iOS செல்பேசிகளில் இந்தச்
செயலியைப் பயன்படுத்தலாம்.
இதற்கென தனியாக கணக்கு ஆரம்பிக்கவேண்டிய தொல்லை இல்லை.
WiFi யிலும்
செல்பேசியின் இணையத் தொடர்பிலும் தானாக மாறி மாறிச் செயற்படும் விதமாக இந்த செயலி
வடிவமைக்கப்பட்டுள்ளதால், அழைப்புத் துண்டிப்பு இல்லாமல் பேச முடியும் என்பது இதன்
மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும் வீடியோ காலிங்கில் ஒருவரின்
இணைப்பின் வேகத்தை பொறுத்து
வீடியோவின் ரிசொலூஷனையும்
தானாகவே அட்ஜஸ்ட் செய்கிறது. கூகிள் பிளே இல் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்து செய்யலாம்.
டவுன்லோட் லிங்க்
@கானாட்டாங்குடி
@kanattangudi