படித்ததில் ......
பசும்பொன் தேவரின் ஜெயந்தி நாளன்று ‘தி இந்து’ நாளிதழின் ‘முத்துக்கள் பத்து’ பகுதியில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. அதில் ‘தேவர் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை, பேச்சாற்றல் கொண்டவர். இவரது பேச்சைக் கேட்ட காம ராஜர், இவரை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்’ என்று கூறப்பட்டிருந்ததற்கு, பல வாசகர் கள் கடிதங்கள், இ-மெயில் மூல மாகவும், தொலைபேசி வாயிலாக வும் மாற்றுக் கருத்துகளை தெரி வித்துள்ளனர். தேவர் திருமகன் பற்றிய கூடுதல் விவரங்களை எழுத்தாளர் ப.சங்கரலிங்கம் நமக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
1933 ஜூன் 23-ம் தேதி விருது நகர் நகராட்சித் தேர்தலில் போட்டி யிட்ட காமராஜர், நீதிக்கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்களால் கடத்தப்பட்டார். சாயல்குடியில் இருந்த தேவர் இதை அறிந்து, விருதுநகருக்கு விரைந்து வந்தார். காங்கிரஸாரை அழைத்து, பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய் தார்.
தேவரின் முழக்கம்
மேடையேறிப் பேசிய தேவர், ‘‘எங்கள் கட்சியின் உண்மைத் தொண்டரை தேர்தலில் நிற்கவிடா மல் செய்வதற்காக நீதிக்கட்சியினர் சிலர் கடத்திச் சென்றுள்ளனர் என்பதை அறிகிறேன். கூட்டம் முடிந்து நான் மேடையைவிட்டு இறங்கும் முன்பு காமராஜர் இங்கு வரவேண்டும். இல்லாவிட்டால், அவரை கடத்தியவர்கள் அதன் விளைவை சந்திக்க நேரிடும்’’ என்று முழங்கினார். தேவரின் பேச்சு முடிவதற்குள் காமராஜரை மேடை அருகில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர். மேடைக்கு வந்த காமராஜர், தேவருக்கு நன்றி கூறினார்.
காமராஜருக்காக கட்டிய வரி
சில நாட்களுக்குப் பிறகு, விருதுநகர் நகராட்சிக்கு தேர்தல் வந்தது. வரி செலுத்துவோர் மட் டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி இருந்தது. ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கிய தேவர், காமராஜர் பெயரில் வரி கட்டி ரசீதைப் பெற்றார்.
காமராஜரை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். அவரை நகரசபைத் தலைவராக்கி பெருமை சேர்த்தார்.
ராஜாஜிக்கு மறுப்பு
1946 மே 16-ம் தேதி திருப்பரங் குன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடந் தது. அதில் காமராஜர் போட்டி யிட்டார். அவரை எதிர்த்து ராஜாஜி அணியினர் காரைக்குடி சா.கணேசனை நிறுத்தினர். தேவரை நேரில் சந்தித்த ராஜாஜி, தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கோரினார். தேவர் மறுத்தார். காமராஜர் வெற்றிபெற தன் செல் வாக்கைப் பயன்படுத்தினார். காம ராஜரின் பெயரை முன்மொழிந்தார். காமராஜர் 152 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சா.கணேசன் 90 வாக்குகள் மட்டுமே பெற்றார். காமராஜர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். பின்னர் தமிழக முதல்வரானார். இதுவே உண்மை வரலாறு. தெய்வீகத் திருமகன் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கே காணிக்கையாக்கினார். இவ்வாறு ப.சங்கரலிங்கம் கூறி யுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த இவர், ‘தேவர் திருக்காவியம்’ நூலை எழுதியவர் ஆவார்.
அரசியலில் ஆர்வம்
திருநெல்வேலி மாவட் டம் போகநல்லூர் த.இசக்கிப் பாண்டியன் ‘காமராஜர் மூலம் தேவர் அரசி யலுக்கு வந்ததாக கூறுவது வரலாற்றுப் பிழை’ என்று கூறியுள் ளதோடு, மேலும் கீழ்க்கண்ட தகவல் களைப் பதிவு செய்துள்ளார்: ‘‘தேவர் தனது குடும்ப சொத்து வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞரை சந்திக்க சென்னைக்கு சென்றார். சென்னையில் அன்று இந்திய அடிமை விடுதலை புரட்சி உணர் வாளர்கள் கூட்டம் நடந்தது.
அதில் கலந்துகொள்ளச் சென்ற தேவரின் வழக்கறிஞர் சீனிவாச ஐயங்கார், தேவரையும் உடன் அழைத்துச் சென்றார். அதுமுதல், அரசியலில் தேவர் ஆர்வத்தோடு செயல்படத் தொடங்கினார். பிற்காலத்தில் நேதாஜியின் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தி சிறை சென் றார்’’ என்று அவர் கூறி யுள்ளார்.
தேவர் தனது குடும்ப சொத்து வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞரை சந்திக்க சென்னைக்கு சென்றார். சென்னையில் அன்று இந்திய அடிமை விடுதலை புரட்சி உணர்வாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்ளச் சென்ற தேவரின் வழக்கறிஞர் சீனிவாச ஐயங்கார், தேவரையும் உடன் அழைத்துச் சென்றார். அதுமுதல், அரசியலில் தேவர் ஆர்வத்தோடு செயல்படத் தொடங்கினார். தெய்வீகத் திருமகன் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கே காணிக்கையாக்கினார்.
படித்ததில் ,பிடித்தது ...
//நண்றி : தமிழ் ஹிந்து //