குடிகார எஜமானரிடம் பரிவு காட்டிய ஐந்தறிவு ஜீவன்!
ஆறறிவு உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கு, ஐந்தறிவு கொண்ட ஜீவன் ஒன்று தனது செய்கையின் மூலம் பாடம் நடத்தியிருக்கும் காட்சி ஒன்று நம் கண்களில் சிக்கியது.
ராமநாதபுரம் அரண்மனை வீதியில் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ள அந்த மாலை நேரத்தில் காளை மாடு ஒன்றை கையில் பிடித்து வந்த ஒருவர் மதுவின் போதை தலைக்கு ஏற சாலையிலேயே சாய்ந்துவிட்டார். தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதானே என எண்ணிய மக்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் கடந்து சென்றனர். இந்த நிலையில்தான் அந்த போதை மனிதர் கூட்டி வந்த காளைமாட்டின் எஜமான் விசுவாசம் வெளிப்பட்டது.
போதையில் தன்நிலை மறந்து கிடந்த தனது எஜமானரை நாவால் வருடியும், காலால் உரசியும் பயனில்லாமல் போனது. இதனால் அந்த குடிகார எஜமானரின் அருகிலேயே காளை மாடும் படுத்து கொண்டது. இதன் பின் நடந்த சம்பவங்கள் இன்னும் சுவையானது.
போதையில் தன்நிலை மறந்து கிடந்த தனது எஜமானரை நாவால் வருடியும், காலால் உரசியும் பயனில்லாமல் போனது. இதனால் அந்த குடிகார எஜமானரின் அருகிலேயே காளை மாடும் படுத்து கொண்டது. இதன் பின் நடந்த சம்பவங்கள் இன்னும் சுவையானது.
உச்சகட்ட போதையில் உருண்டு கிடந்த அந்த நபர், தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாத நிலையில் தனது கை, கால்களை வாகனங்கள் சீறி பறக்கும் சாலையில் பரப்பியபடி புரண்டு கொண்டும், அவர் அருகில் படுத்திருக்கும் காளைமாட்டின் முகத்தினை தடவிவிடுவதுமாக இருந்தார். குடிபோதையிலும் தன் மீது பாசம் காட்டும் தனது எஜமானரை நினைத்து உருகிய அந்த காளை, அவ்வப்போது சாலையின் மையப்பகுதிக்கு சென்று, தனது எஜமானரின் கை, கால்கள் மீது தனது கால்களை போட்டு அமுக்கியவாறு அரண் அமைத்தது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகனங்களில் சிக்கி சிதையாதவாறு தப்பித்தார் அந்த குடிகார எஜமானர்.
மன்னராட்சி காலத்தில் மக்களுக்கு அரணாக திகழ்ந்த மன்னன் வாழும் இடம் அரண்மனை ஆகும். அந்த அரண்மனை அமைந்திருக்கும் சாலையில் சென்ற மக்கள் ஒரு காளை மாட்டின் எஜமான் விசுவாசத்தை கண்டு மெய்சிலிர்த்து போனார்கள்.
இதுபோன்ற ஐந்தறிவு ஜீவன்களிடம் உள்ள பரிவை, ஆறறிவு உள்ள மனிதர்களும் காட்டுவார்களா?
இதுபோன்ற ஐந்தறிவு ஜீவன்களிடம் உள்ள பரிவை, ஆறறிவு உள்ள மனிதர்களும் காட்டுவார்களா?
//நன்றி : விகடன் //