31 மார்ச், 2018

VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ' வீடியோ எடிட்டர் .







ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெருகேற்றிய பின் வெளியிடலாம். ‘வீடியோஷோ' செயலி இதற்கு உதவுகிறது.

‘ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா!' என்பது போல் சிலர் வீடியோவின் ஒவ்வொரு நொடியையும் தானாக வடிவமைக்க நினைப்பார்கள். சாதாரண வீடியோக்களை ஸ்லோ மோஷன் வீடியோவாக இதில் சில நிமிடங்களில் எடிட் செய்துகொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் நிறைய டெம்ப்ளேட் இசை வடிவங்கள் சேர்ந்தே கிடைக்கின்றன. மொபைலில் இருக்கும் பாடல் அல்லது இசையை பயனாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்வதோடு, எடிட்டிங் செய்யும்போதே ரெக்கார்ட் செய்து ஒலியை சேர்த்துக்கொள்ளவும் முடியும். புகைப்படங்களை எடிட் செய்வதைப் போல இதில் டச்-அப் வேலைகளைச் செய்து, அதிநவீன வீடியோக்களை பயனாளர்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.



அலட்டிக்கொள்ளாமல் வீடியோவை எடிட் செய்ய விரும்புவோருக்கான அப்ளிகேஷன் இது. 
வீடியோவை ரிவர்ஸில் ஓடக்கூடியதாகவும் மாற்ற முடியும். எடிட் செய்யும்போதே அதை ப்ரிவ்யூ செய்து பார்த்துக்கொள்ளவும் முடியும்.

வீடியோ படங்களை எடிட் செய்வது, அவற்றில் பின்னணி இசை சேர்ப்பது, ஃபில்டர்களைப் பயன்படுத்துவது போன்றவ‌ற்றை இந்தச் செயலி மூலம் செய்து கொள்ளலாம். அவற்றில் பொருத்தமான ஸ்டிக்கர்களையும் சேர்த்து பின்னர் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் முலம் பகிர்ந்து கொள்ளலாம்.
குறும்படமோ, விளம்பரப் படமோ எடுத்துப்பார்க்கும் ஆசை இருந்தால் இந்தச் செயலி மூலம் முயன்று பாருங்கள்.


ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய..

ப்ளே ஸ்டோர் லிங்க் 
  

ப்ரோ வெர்சன் லிங்க் 



#கானாட்டாங்குடி
#kanattangudi




27 ஜூலை, 2017

வளைந்து நெளியும் பாம்புகள் உங்கள் கைபேசி திரையிலும் தோன்ற வேண்டுமா ??

வளைந்து நெளியும் பாம்புகள் உங்கள் கைபேசி திரையிலும் தோன்ற வேண்டுமா ??

 
                     




நீங்கள்  Facebook ல கீழே உள்ளது மாதரி தொடர்ந்து பார்த்து வரலாம்.

ஒரு மாதிரி பாம்பு ஓட்டுரது எப்படி எண்டு கண்டுபிடிசாசி.....
முதலாவது Like பண்ணுங்க
இரண்டாவது  Run என Comment பண்ணுங்க
மூன்றாவது Share பண்ணுங்க.....                            “




என்ன ஒரு ஆப்ஸ் ம் இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும் .



இதற்கான ஆப்ஸ் இலவசமா PlayStore ல்  கிடைக்கிறது.
கீழே உள்ள லிங்க் ஐ தொடர்ந்து சென்று டவுன்லோட் செய்து உங்கள் போனிலும் பாம்பை நெளியவிடுங்கள் .

                        





Download Link :


26 ஜூலை, 2017

கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் காப்பு கட்டு !!!

கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் காப்பு கட்டு !!! 

25 ஜூலை 2017.







     இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை கானாட்டாங்குடி ஒத்தப் பனை பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 18 ல் தீமிதி திருவிழா நடை பெறுவது வழக்கம் .அதனை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. 
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஆடி 18 அன்று நடைபெறும்.


கானாட்டாங்குடி காப்புக்கட்டு எப்படி இருக்கும் !

   கானாட்டாங்குடி பத்ர காளியம்மன் கோவில் காப்புக்கட்டு நடப்பதற்கு முன்பாக கானாட்டங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை சாலையில் இருபுறமும் உள்ள முள் செடிகள் (வேலிக்கருவை) வெட்டப்பட்டு சாலை சீரமைக்கபடும்.
  காப்புகட்டுவதற்காக வைக்கோல் பிரி செய்து அதில் வேப்பிலை, மாவிலை சொருகி ஒரு நீண்ட மாலை போல தோரணம் தயார்செய்து இருக்கும்.  இந்த தோரணத்தை கோவில் முன்பும் ஊர் எல்லையில் இருபுறமும்  சாலையின் குறுக்கே கட்டப்படும்.
                 
                 நேத்திக்கடன் செலுத்துபவர்கள், காவடி, கரகம் மற்றும் பால் குடம் எடுப்பவர்கள் சிறப்பு உடையனிந்து     கோவில் பூசாரியால் அர்ச்சிக்கப்பட்ட மஞ்சளை நூலில் கட்டி, தங்கள் வலது கை மணிக்கட்டில் கட்டிகொள்வார்கள்.
அன்று முதல்  தீ மிதி நாள் வரை விரதம் இருந்து தங்களின் நேத்திக்கடனை செலுத்துவார்கள்.




கோயில் விசேஷங்களில் காப்பு கட்டுதல் அப்படினா என்ன ?


ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் 
என்று வேண்டிக்கொன்று செய்வதற்கு காப்பு கட்டுதல் என்று பெயர்.

நாம் செய்வது ஒருநாள் பூஜையாகவும் இருக்கலாம் அல்லது பத்து நாள் பூஜையாகவும் இருக்கலாம். இந்த மாதரி செய்யகூடிய காரியங்களில் காப்புகட்டுதல் செய்துகொண்டால் ஊர் எல்லை தாண்டி போககூடது, விரதம் இருக்கணும் இது மாதரி இருந்துகொண்டால் அந்த காப்பு நம்மை காப்பாற்றும் .  



#கானாட்டாங்குடி
#kanattangudi

25 ஜூலை, 2017

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியம் இல்லை !!!

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியம் இல்லை !!!


மத்திய அரசு பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.

புதிய நடைமுறைகள் :

1.

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும்.

2.

1980 பாஸ்போர்ட் வரைமுறைகளின்படி 26/01/1989 என்ற தேதியில் அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்து வருகிறது.


3.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்

4.

இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15ல் இருந்து 9ஆக குறைக்கப்படுள்ளது. அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது. ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை. 


5.

திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


பிறப்பு சான்றிதல் இல்லாதவர்கள்  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செய்யலாம் .


#kanattangudi


18 மே, 2017

ஃபேஸ்புக்கில் வைரலாகும் ‘ஃபேஸ் ஆப்’

ஃபேஸ்புக்கில் வைரலாகும் ‘ஃபேஸ் ஆப்’





ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட விஷயம் இணையதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் விஷயம் ‘ஃபேஸ் ஆப்’. இதன் மூலம் ஆண் முகத்தைப் பெண் முகமாகவும் பெண் முகத்தை ஆண் முகமாகவும் மாற்றலாம். நீங்கள் வயதானால் எப்படி இருப்பீர்கள் என்றும் மாற்றிப் பார்க்கலாம். இளைஞராக இருக்கும் உங்கள் முகத்தைக் குழந்தை முகமாகவும் மாற்றிப் பார்க்கலாம்..


நம் புகைப்படத்தை எடுத்து அதில் அப்லோட் செய்துவிட்டால் போதும். அதில் இருக்கும் வசதிகள் மூலம் பல்லைக்காட்டிக் கொண்டு சிரிப்பது போலவும்நமது இள வயதுத் தோற்றம் மற்றும் முதிய தோற்றம் ஆகியவற்றை கொண்டுவர முடியும். இது போன்ற ஆப்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிகிடந்தாலும் மற்ற ஆப்களை போல் அல்லாமல் உண்மையில் நாம் முதிய வயதில் இப்படிதான் இருப்போமோஎன்று பயனாளரை எண்ண வைக்கும் அளவிற்கு துல்லியம் காட்டுகிறது. அதில் முகத்தை பெண் முகம் போல மாற்றும் வசதி நம்மையே வெட்கப்பட வைக்கும் அளவிற்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம்  செய்து நீங்களும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.



இந்த ஆப்பின் ப்ரோ வெர்சன் தரவிறக்கம்  செய்ய கீழுள்ள லிங்க்கிள் தொடரவும்.

#Faceapp Pro apk

#kanattangudi

 

https://uplod.ws/xpfk10smm6fz

1 ஏப்ரல், 2017

சிந்தனைகள்

சிந்தனைகள்.







1] எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...


2]தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...




4] குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.


5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.


6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.



7] சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள்.



8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]



9] ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.



11] அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.



12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.



13] எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.



14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
நம்பிக்கையையே ஆகும்.



15] அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.



16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!



Kanattangudi

12 பிப்ரவரி, 2017

ஆண்ட்ராய்டில் விளையாடலாம் ஜல்லிக்கட்டு..!

ஆண்ட்ராய்டில் விளையாடலாம் ஜல்லிக்கட்டு..! 




         ஜல்லிக்கட்டு விளையாட்டினை ஆண்ட்ராய்டில் விளையாட அமெரிக்காவில் உள்ள ஆவேகா இன்டெராக்டிவ் நிறுவனம் ஜல்லிகட்டு ரன் என்ற பெயரில் ஆப்ஸ்  தயாரித்துள்ளது. இந்த ஆப்பை இது வரை  50000 பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி 8ம்தேதி வெளியாகியுள்ள இந்த ஆப்ஸுக்கு ரிவியூக்களும் சிறப்பாக அமைந்துள்ளன.  இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 4.8 ரேட்டிங் பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது . மதுர குலுங்க குலுங்க கிராமிய இசையுடன்  துவங்கும் இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் டவுன்லோட் செய்ய ............





@ kanattangudi.

VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...