” அழகர்மலை “
மதுரை
அழகர் கோவில் – ” ராமதேவர் சித்தர் “
அழகர்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்புதங்கள் நிறைந்த அழகர் மலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்து வந்துள்ளார் .ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ சித்திகள் வாய்க்கப் பெற்றார். வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயில ஆரம்பித்தார்.
>> சஞ்சார சமாதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டு பல புண்ணிய தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்..ஒரு சமயம் மெக்கா சென்றார். அங்குள்ளவர்கள் அவருக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி உபதேசம் செய்தார்கள். யாக்கோபு வெகு விரைவில் மெக்கா மக்களால் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.ஒருவர் பின் ஒருவராக சீடர் பலர் சேர்ந்தனர். பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி வைத்தார். ஒரு நாள் கற்பக மூலிகைகளின் திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில் இருக்கப் போவதாகச் சீடர்களிடம் கூறினார். சமாதி மூடப்பட்டது.
ராமதேவன்
கற்பக மூலிகைகளின் துணை கொண்டு யார் கண்ணிலும் படாமல் அங்கிருந்து மறைந்தார். காடு
மலை நதி என்று நாடு கடந்தும் சுற்றித் திரிந்தார். அந்தக் காலத்தில் காலாங்கி
நாதர் சமாதியைத் தரிசித்தார். உடனே கைகளைக் கூப்பி வணங்கி அதன் பக்கத்திலேயே
தியானம் செய்ய ஆரம்பித்தார்.தியானம் சித்தியான நிலையில் காலாங்கி நாதர்
ராமதேவருக்குத் தரிசனம் தந்து அனுபவ ரகசியங்களை உபதேசித்து மறைந்தார். ராமதேவருக்கு
அநுபூதி நிலை கை கூடியது. யாக்கோபு என்ற பெயரில் மெக்காவில் எழுதிய பதினேழு
நூல்களைத் தமிழில் பாடினார். சதுரகிரியில் சிலகாலம் தங்கியிருந்து தவமியற்றினார்.
பத்து
ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபு சொன்னது போலவே திரும்பி வந்தார். தன் உண்மைச் சீடன்
சமாதியருகிலேயே இருந்தது கண்டு மனம் நெகிழ்ந்தார். நான் மறுபடியும் சிறிது காலம்
சமாதியிலிருக்க விரும்புகிறேன். இந்த முறை முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன்.
நான் சமாதிக்குச் சென்ற பிறகு என்னைத் தரிசிக்க வேண்டுமானால் சதுரகிரி மலைக்கு வர
வேண்டும்,
என்று தெரிவித்து விட்டு சமாதியானார்.
முப்பதாண்டுகள்
தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதேவராக நடமாடிய யாக்கோபு சதுரகிரி வனத்தில் தங்கி
வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார். ராமதேவர் மெக்காவிலிருந்து திரும்பி
வந்து சதுர கிரிவனத்தில் தங்கியதால் அந்த வனத்திற்கு ராம தேவர் வனம் என்ற பெயரே
வழங்குகிறது.அதன் பிறகு ராமதேவர் மறுபடியும் மெக்கா சென்று அனைவருக்கும் தரிசனம்
தந்ததாகக் கூறப்படுகிறது.
யாக்கோபின்
அன்புக்குரிய சீடனை அழைத்து அவனுக்கு காயகற்ப முறைகளைப் போதித்து இனிதான் திரும்ப
மாட்டேன். நிரந்தர சமாதியோகம் பூணப் போகிறேன் என்று கூறி மெக்காவில் மவுன
சமாதியானார். பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டு தமிழகம் வந்து அழகர் மலையில்
சமாதியடைந்தார்.
ராமதேவர்
ஜீவ சமாதி அடைந்த இடத்தில், சிவலிங்க வழிபாடு, ஒவ்வொரு
சனிக்கிழமையும் பகல் 12 மணிக்கு நடக்கிறது.
இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே, குகை போன்ற இடத்தில்
சிறிய அளவில் லிங்கம் உள்ளது. இங்கு செல்வது கடினமானது. கரடு, முரடான, செங்குத்தான
மலைகளைக் கடந்து, ஒற்றையடிப்பாதையில் செல்ல
வேண்டும். மேலும், மிருகங்கள் நடமாட்டம்
மிகுந்த வனம் என்பதால், பாதுகாப்பு கருதி, நான்கைந்து
பேர் சேர்ந்தே செல்கின்றனர். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, சோலைமலை
முருகன் கோயிலுக்கு வேன்களில் செல்லலாம். கோயிலை அடுத்துள்ள நூபுர கங்கை ராக்காயி
அம்மன் கோயிலில் இருந்து, ராமதேவர் சித்தர் மலைக்கு
7
கி.மீ., நடந்து
செல்ல வேண்டும். செல்லும் வழியில், தண்ணீர், உணவு
கிடைக்காது. உடலை வருத்தி வணங்க வரும் பக்தர்களுக்கு, ராமதேவர்
சித்தர்,
வேண்டிய வரம் தந்து காத்தருள்வார்..
நான் வணங்கும் சித்தா் ஒரு முறை வந்து பாருங்கள் …
//நன்றி இணையம் //