15 ஆகஸ்ட், 2015

அகர் மரம்

மரம் வளர்ப்போம் 

அகர் மரம் வளர்ப்பு.


                அகர் அப்படி ஒரு மரம் இருக்குறதே எனக்கு  தெரியாது இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற மரம் எது  என்று நான் தேடும் வரை .உலகிலேயே மிக விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தைவிட சுமார் 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. ஆண்டிற்கு 125 -750 சேன்டி மீட்டர் வரையிலான மழையள எதற்கு போதுமானது .



1 . மிகவும் வேகமாக  வளரகுடியது.
2 . சந்தன மரம் போல அல்லாமல்  7  அவது  வருடத்தில்  இருந்தே அறுவடை செய்யலாம்.
3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது.
4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.
7  வருடம்  நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்



ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள அகர் மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள ஓர் அமைப்பு

 அகர் மரம் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து, அகர் கன்றுகளைப் பயிரிட வைத்து, உரங்கள் மற்றும் தேவையான உதவிகளை பைசா செலவின்றி இலவசமாகச் செய்து வருகிறது, கர்நாடகாவைச் சேர்ந்த வனதுர்கி என்கிற அமைப்பு. தவிர, மரங்கள் வளர்ந்த பிறகு, அவற்றை நல்ல விலைக்கும் வாங்கி சந்தைப்படுத்துகிறார்கள்.
       இந்த அமைப்பின் நிறுவனர் 32 வயதான தர்மேந்திராவிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரை, பரம்பரையாக விவசாயம்தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்குச் சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வேளாண்மை சார்ந்த புதிய உத்திகளையும், தொழில் நுட்பங்களையும் கற்று புது ரகச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி, ஒருமுறை இந்தோனேஷியாவிற்குச் சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். இதைப் பார்த்த எனக்கு, நம் நிலத்திலும் அகர் மரம் பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முதலில் குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து எங்கள் சொந்த எஸ்டேட்டில் பயிரிட்டோம். செலவில்லாமலேயே நல்ல வருமானம் கிடைத்தது. சந்தன மரங்களின் வேர்கள் ஒட்டுண்ணித் தன்மை கொண்டவை. இதனுடன், அகர் மரத்தை ஒப்பிட்டால் சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கக் கூடிய வருமானத்தை, அகர் மரம் வளர்க்க ஆரம்பித்த 8 லிருந்து 10 ஆண்டுகளுக்குள் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு அகர்மரக் கன்றை 50 ரூபாக்குக் கொடுக்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலேயே அதிக அகர் மரப் பண்ணைகள் வைத்திருப்பதும், தென்னிந்தியாவில் அகர் மர வளர்ப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எங்கள் வனதுர்கி அமைப்புதான். அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இம்மரம் நம் நாட்டின் கலாச்சாரத்துடனும், இறை நம்பிக்கையுடனும் ஒன்று கலந்திருக்கின்றது.

தர்மேந்திரா.
தொடர்புக்கு: 94484 34561 


இலங்கையில்... ஒரு அகர் மரக்கன்று 1400 ரூபா.
கர்நாடகாவில் ஒரு கன்றின் விலை 50 ரூபா.

இம்மரங்கள் மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், வாலோஸ் ஆகிய நாடுகளிலும் வளர்கின்றன.

##

kanattankudi
கானாட்டான்குடி 

VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...